உடல் நலம் பேணுவதற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது. நீங்கள் தகுந்த உடல்நலத்துடன் இருப்பது உங்கள் ஆன்மீக சாதனைகளுக்கும் கூட அவசியமாக உள்ளது. ஆன்மீகத்திற்காக மட்டும் என்பதில்லை, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நலமாக இருப்பதற்குக்காக கூட, உடல்நலம் பேணுவது அவசியமாக இருக்கிறது.
உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும் அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். இது மிக முக்கியம். யோகாவில், 8 மணி நேர இடைவெளி கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் 5 மணி நேர இடைவெளி ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை. ஏனெனில்,வயிறு காலியாக இருக்கும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.
இதை ஒரு பரிசோதனை மூலமாக பார்க்க முடியும். ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவை இரண்டாகப் பிரித்து இரு வேளைகளில் சாப்பிட்டு வாருங்கள்.
சில நாட்கள் கழித்து அதே அளவு உணவை பத்தாகப் பிரித்து 10 வேளைகளில் சாப்பிடுங்கள். 10 வேளைகள் சாப்பிடும்போது உங்கள் உடலில் எடை கூடியிருக்கும். 10 வேளை சாப்பிடும்போது எப்போதும் வயிறு நிறைந்திருப்பதால்.
உங்கள் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. எனவே, உங்கள் உடலை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய கழிவுப்பொருள், வெளியேறாமல் அப்படியே உங்கள் உடலிலேயே தங்கியிருக்கும்.
வயிறு காலியாக இருக்கும்போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எனவே, ஏற்கனவே சாப்பிட்டது ஜீரணமாகும்வரை காத்திருந்து பிறகு அடுத்த வேளைச் உணவைச் சாப்பிட வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது ஒரு நாள் முழுக்க விரதம் இருங்கள்.