1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. இவர் தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் விஜய்யுடன் இணைந்து ‘ரசிகன்’ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து ‘லக்கி மேன்’, ‘கோயம்புத்தூர் மாப்ளே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது, சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் தற்போது ‘கொலஞ்சி’ என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் நாயகனாக ராஜாஜியும் நாயகியாக நைனா சர்வாரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சங்கவியும் நடிக்கிறார். இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தை தனராஜ் சரவணன் இயக்குகிறார். நட்ராஜன் சங்கரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராசிபுரத்தில் நடந்து வருகிறது.
90-களில் முன்னணி நடிகையாக வந்து ரசிகர்களை கவர்ந்த சங்கவி தற்போது, குணசித்திர வேடங்களில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது