தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகர் செந்தில்.
இவர், நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றைக்கும் மிக பிரபலமானவை. 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். மாறாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர், சிம்புதேவன் இயக்கிய ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ எனும் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் செந்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளப்படம் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தை மிஷ்கினின் உதவியாளர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் செந்திலாகவோ அல்லது புரொடக்ஷன் மானேஜராகவோ வரலாம் என கூறப்படுகிறது.
செந்திலின் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். நான்கு காட்சிகளில் மட்டுமே நடிகர் செந்தில் நடித்திருந்தாலும், படம் முழுக்க அவர் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா தொடர்பான இந்தப் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை மிஷ்கின் வெளியிடுகிறார்.