செப்டம்பர் 7 தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கியது இப்பயணம் காஷ்மீரில் முடிய இருக்கும் நிலையில் இப்போது அவரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தொடர்ந்து கொண்டு பயணம் செல்கின்றது.
இந்நிலையில் இவர் செல்லும் பாதைகளில் பல முறை அரசை விமர்சித்து பல ட்விட்டுக்களை அவரது ட்விட்டர் பக்கங்களில் போட்டு வந்தார் அதில் அதிகம் பஜகாவை ஊழல் அரசு என்றும் வஞ்சகத்தில் இருந்து குஜாரத்திகளை காப்பாற்றுவேன் என்றும் கூறி இருந்தார்.
அநீதியை எதிர்த்தே இப் பயணம் என்றும் ட்விட்டுக்களை அள்ளி விட்டிருந்தார் அதை போல் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார்
ஆனால் கே.ஜி.எப் பாடலை பயன்படுத்தி போட்ட வீடியோவால் இன்று அவரின் மேல் பல தரப்பட்ட வழக்குகள் பதியப்பட்டு (இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 கீழ் 403 ,565 ,120 பிரிவுகளின் கீழ் 1957 காப்புரிமை சட்டம் 63 ன் கீழும்) உயர் நீதி மன்றம் வரை இந்த வழக்கு சென்று இவரின் இரண்டு பக்கங்களும் முடக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.