இந்தியாவின் அரிசி ஏற்றுமதிகளில் தனி ஒரு இடத்தை பிடித்துள்ள குருணை அரிசிக்கு விதிக்கப்பட்ட ஏறுமதி தடை நீக்கப்பட்டது.
இரசாயன உரம் , மருந்து பயன்பாடு இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி ரகம் சாராத அரிசி வகைகளே குருணை அரிசி ஆகும்.இந்த அரிசிகளின் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு தேவைக்காக மத்திய அரசு இவ்வரிசியின் ஏற்றுமதியை தடை செய்தது.
தற்காலிகமாக செப்டம்பர் 30 வரை இதற்கு ஏற்றுமதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இப்போது நிரந்தர அனுமதியை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் கொடுத்துள்ளது. மீண்டும் அரிசி விலை குறைவடைந்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் முன்னாள் ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் “ஆண்டுக்கு 10000-15000 டன் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே ஏற்றுமதி தடை நீக்கம் வர்த்தகத்துக்கு நன்மை தரும்.”