ஜி 20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி அவர்களே எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வருடத்துக்கான ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நடை பெற்று முடிவடைந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறபோகும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக தயார்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்யும் நடவடிக்கை ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடப்பட்ட நிலையில்
பிரதமர் மோடி அவர்களால் அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பை விடுத்துள்ளார்.
மோடியின் அழைப்பை ஏற்று பழனிச்சாமியும் நாளை டெல்லி செல்லவுள்ளதாக அரசியல் தரப்பு தகவலாக உள்ளது.