இறைவன் ஒன்றே என்னும் தத்துவத்தை விளக்கும் திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் நாள் இன்று.
உலகெங்கும் இருக்கும் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபம் ஆகும். இவை தீபங்கள் ஏற்றி முதல் நாள் கோவிலிலும் மறுநாள் விசேடமாக வீடுகளிலும் கொண்டாடப்படும் இந்த கார்த்திகை தீபம் திருநாள் திருவண்ணாமலை ஆலயத்தில் விசேடமாக ஏற்றப்படும் பலகால பழமை வாய்ந்த மரபாக உள்ளது.
சிவபெருமானுக்கான முக்கிய பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பார்க்கப்படுகிறது இந்த தளத்தில் வருடம் தோறும் புனித மலையில் 2700 m உயரத்தில் 1லிட்டர் நெய் ஊ ற்றி மஹா தீபம் ஏற்றப்படும். அந்த நேரத்தில் அண்ணாமலையாருக்கு அரோஹரா என்று பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை பிளக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை தீப விழா இந்த வருடமும் சிறப்பாக ஏற்றப்பட்டது.
மலை உச்சி செல்வதற்கு 2500 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது ஆதார், குடும்ப அட்டை போன்ற ஆட்களை அடையாளப்படுத்தும் நகல்களை காட்டி அனுமதி சீட்டு பெற்று வரிசையாக நின்று சுவாமி தரிசனம் பெரும் நிலை காணப்பட்டது.
இந்த முறை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை தீபம் காண வந்தனர்
இன்றைய விழாவிற்கு பொலீஸ் அதிகப்படியான பாதுகாப்பை வழங்கியுள்ளது. கொரோனா தளர்வின் பின் தீபம் காண பெருந்தொகையான மக்கள் அங்கெ குவிந்தமை குறிப்பிடத்தக்கது .