ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘தூக்கு மர பூக்கள்’ என்ற படத்தை ஜெயவிஜயசாமுண்டீஸ்வரி புரொடக்ஷன்– ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.
செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மனிதாபமின்றி துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவை பாபு ராஜேந்திரன் கவனிக்கவிருக்கிறார். சுனில் சேவியர் இசையமைக்கிறார். சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நடிகர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கவிருக்கிறார்கள்.