சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவரும் அவரது தாயும் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்தமையால் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
இவர்கள் மியான்மார் நாட்டை சேர்ந்த பெண்ணை 2015 ஆம் ஆண்டு பணிக்கு சேர்த்தனர் . 2016 ஆம் ஆண்டு அந்தப்பெண் மர்மமுறையில் இறந்தார் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உணவின்றி அடித்து சித்திரவதை செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
எனவே அவரது மரணத்துக்கு காரணமான வீட்டு உரிமையாளர்களான தாய் மகள் இருவரும் கைது செய்யப்பட்டு மகளுக்கு 2021 ஆம் ஆண்டு 30 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. தாய் தொடர்பில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் அவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.