சாவி துளை அறுவை சிகிச்சையை(laparoscopic) முதல் முதலாக இந்தியாவில் நடத்திய பெருமைக்குரிய டாக்டர் டெம்டன் எரிக் உதவாடியா தனது 88 வது வயதில் இன்று மரணித்தார்.
இவர் மனித உள் உறுப்புகளை வெட்டாமல் சத்திர சிகிச்சை செய்வதை இலகுப்படுத்தியவர் ஆவார். இவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மும்பயில் பிறந்த எரிக் பார்சி மததை சேர்ந்தவராகவும் மத்திய அரசால் பத்ம ஸ்ரீ ,பத்ம பூசணம் விருதுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிட்ட தக்கது.