0
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியும், 43 ஆம் படையணியும் தீர்மானித்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் வழிகாட்டலுடன் இயங்கும் புதிய லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையில் 43 ஆம் படையணி செயற்படுகின்றது.