இந்தியாவின் அரசியலில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆளுநர்கள் இவர்கள் அந்த அந்த மாநிலங்களில் தமது நடுநிலையான ஆட்சியை செய்யவே குடியரசு தலைவரால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுபவர்கள்.
இப்படி ஆட் சி நிலையில்கருத்து முரண்பாடு நான் பெரியவர் என்ற நிலையை வெளிக்காட்டும் போது பெரிய பிரச்சனைகள் தோன்றி விடும்.
அந்த வகையில் இந்த வருட ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்ட தொடரில் முதலமைச்சர் மு.கே.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
இதை போலவே டெல்லியில் ஆளுநர் வி.கே.சச்சேனாவுக்கும் இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.அது தொடர்பில் மேலும் தெரிய வருவது அரச பாடசாலை ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பில் முதலமைச்சரின் விருப்பத்தை மறுத்த ஆளுநர் அவர்களின் பேரணியை சந்திக்கவும் மறுத்துள்ளார்.
தொடர்ந்து வெள்ளிதோறும் முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு அரச வழக்காக உள்ள நிலையில் கடந்த சில வாரமாக அதையும் பேணாமல் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் தன்னை காண வரலாம் என்ற அழைப்பை ஆளுநர் விடுத்திருந்த போது அதனை கெஜ்ரிவால் (முதலமைச்சர்) மரியாதையாக ஏற்க மறுத்தார்.
தான் ஆளுநரின் அழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பஞ்சாப் சென்று மருத்துவமனை திறக்க இருப்பதனால் வேறு திகதியில் சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார்.