முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான வேடபுமனுத் தாக்கலின்போது கரைத்துரைப்பற்று பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கு எதிராகவே உயர்நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனு கோரும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அதிகாரமளிக்கப்பட்ட முகவர் அந்த வேட்புமனுவைக் கையளிக்காததன் காரணமாகவே வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எனினும், அதிகாரமளிக்கப்பட்ட உறுப்பினர் மாவட்ட செயலகத்தின் தேர்தல் திணைக்களத்திலேயே அந்தச் சமயத்தில் நின்றிருந்திருந்தார் என்பதால் அவர் வேட்புமனுவைக் கையளிக்கவில்லை என்று கருத முடியாது என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார்.