தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், இரத்த தான முகாம்கள் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் என பல்வேறு மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக கட்சி டுவிட்டர் பக்கத்தில்,
“எங்கள் அன்புக்குரிய தலைவர், திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #HBDMKStalin70 பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு எங்களுடன் சேர இருக்கும் எங்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரையும் அழைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
“மார்ச் 1, 1953 இல் பிறந்த ஸ்டாலினுக்கு 70 வயதாகிறது. மேலும், திமுக தலைவரைப் புகழ்வதற்கு கட்சித் தொண்டர்கள் ‘திராவிட நாயகன்’ என்ற வார்த்தையை பயன்படுத்த உள்ளோம்”, என்று தெரிவித்துள்ளது.
ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மார்ச் 1ஆம் திகதி தொடங்கி வைக்கவுள்ளார்.