இக் காலகட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்த பதற்றம் நிலவுவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு, இராணுவப் பலத்துடன் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கடந்த காலத்தை விட, இந்தியாவிடம் அதிகமாக உள்ளது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அது சாத்தியமாக உள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.