2014ஆம் ஆண்டு, மலோசியா – கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற ‘MH370’ என்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது.
விமானப் போக்குவரத்தில் மிகப் பெரிய மர்மமாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் குறித்து, 9 வருடங்கள் ஆகியும் எந்தத் தடயமும் இல்லை.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பிலான புதுத்தொடரை Netflix வெளியிடுகின்றது.
கடந்த 8ஆம் திகதி முதல் இந்தப் புதுத்தொடர் வெளியாகியுள்ளது.
இதில் ‘MH370’ விமானம் காணாமல் போனதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது ஆராயப்படும் என தொடரின் வழங்குநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி – ‘MH370‘ விமானத்தை தேடுமாறு மீண்டும் கோரிக்கை