தேசிய யானைகள் தினம்
தாய்லாந்தில், தேசிய யானைகள் தினம், இன்று (13) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, யானைகளுக்கு விருந்து உபசாரம் வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் உள்ள தாவரவியல் பூங்காவிலேயே யானைகள் தினம் இவ்வாறு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தாய்லாந்து கலாசாரத்தில் பண்டைய காலம் தொட்டு யானைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
எனவே, ஆண்டுதோறும் மார்ச் 13ஆம் திகதி தாய்லாந்தில் யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சோன்புரி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோங் நூச் தாவரவியல் பூங்காவில், 26 அடி நீள மேஜையில், 3 டன் பழங்களும், காய்கறிகளும் படைக்கப்பட்டு, 60 யானைகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது.