ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.
இதன்போது, அவர் புச்சா நகருக்கு சென்ற ஃபுமியோ போரில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து – உக்ரைன் தலைவர்கள் சந்திப்பு
தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம், ஜப்பான் பிரதமர் உறுதியளித்தார்.