இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்.
கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள்.
அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 13.04.2023 அன்று 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.