செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கடவுச்சீட்டு மோசடி குறித்து இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

கடவுச்சீட்டு மோசடி குறித்து இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

1 minutes read

இங்கிலாந்து கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்த ஐந்து வார காலப்பகுதியில், கடவுச்சீட்டு மோசடிகள் குறித்து இங்கிலாந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை The Chartered Trading Standards Institute (CTSI) எனும் அமைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து கடவுச்சீட்டு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

விரைவாக கடவுச்சீட்டை புதுப்பிக்க தங்களை அணுகுமாறு, மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் மோசடியாளர்களால் அனுப்பப்படுகின்றன. இந்த மோசடியாளர்களை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம் என CTSI எச்சரித்துள்ளது.

விரைவாக கடவுச்சீட்டை புதுப்பிக்கலாம் என நம்பி மோசடியாளர்களிடம் விவரங்களை தெரிவித்தால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன், பணத்தையும் இழக்க நேரிடலாம் எனவும் CTSI அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும், இந்த மோசடிகளை தவிர்க்க, மக்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக அரசின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More