தற்போது எல்நினோ காலநிலை காரணமாக வெப்பநிலை உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதன் தாக்கத்தை தமிழகத்தில் மிகவும் தெளிவாக மக்கள் அனுபவிக்கின்றனர்.
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர்
ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.
அந்தவகையில் கோடை வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே சென்னை மக்களின் தவிப்பு தொடங்கியது. இதற்கிடையில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் வெயில் காலம் தொடங்கியது.
காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருப்பதாகவும் . நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. மதியம் 3 மணிக்கு மேல் அனல் காற்றுடன் கூடிய ஊமை வெயில் மக்களை வாட்டுகிறது . மாலை 6 மணி கடந்தும் இதே நிலைமை தொடர்ந்த வண்ணம் உள்ளது.