புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகளின் கீழ், ஆராய்ச்சி அல்லாத (non-research courses) கற்கைநெறிக்கு வெளிநாட்டு முதுகலை மாணவர்கள் (postgraduate students) இனி தமது குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்த வருடம் சட்டப்பூர்வ இடம்பெயர்வுகள் 700,000 ஐ எட்டியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அதேநேரம், கடந்த வருடம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ந்தவர்களுக்கு என 135,788 விசாக்கள் வழங்கப்பட்டதுடன், இது 2019 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பிரதமர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கை இடம்பெயர்வைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார்.
இந்தச் செய்தியையும் படியுங்கள் – மாணவர்களுக்கு புதிய விசா நடைமுறை
அத்துடன், 2024 ஜனவரியில் தொடங்கும் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர்வதைக் குறைக்க அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளதாக கடந்த வாரம் தெரிவித்த பிரதமர், ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை என்ன என்பதைக் கூற மறுத்துவிட்டார்.
முன்னதாக, கன்சர்வேடிவ்கள் இடம்பெயர்வுகளை ஆண்டுக்கு 100,000 க்கு கீழே கொண்டு வருவதாக உறுதியளித்த போதும், 2019 தேர்தலுக்கு முன்னதாக தமது இலக்கை பலமுறை சந்திக்கத் தவறியிருந்தனர்.
புதிய அறிவிப்பின்படி, ஆராய்ச்சித் திட்டங்களாக நியமிக்கப்பட்ட படிப்புகளைத் தவிர முதுகலை மாணவர்களின் துணை மற்றும் குழந்தைகள், படிப்பின் போது இங்கிலாந்தில் வாழ விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியையும் படியுங்கள்: படிப்புக்காக குடும்பத்துடன் இங்கிலாந்து செல்வதில் இனி சிக்கல்?