September 21, 2023 12:03 pm

படிப்புக்காக குடும்பத்துடன் இங்கிலாந்து செல்வதில் இனி சிக்கல்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இங்கிலாந்துக்கு படிப்புக்காக செல்வோர் தமது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்வதில் இனி சிக்கல்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

காரணம், படிப்புக்காக இங்கிலாந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், பின்னர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரும் எண்ணிக்கை 8 மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நாட்டு குடிவரவு புள்ளி விவரங்களின்படி, கடந்தாண்டு கிட்டத்தட்ட 5 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்களை சார்ந்த வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் என 135,788 பேர், இங்கிலாந்துக்கு வந்துள்ளனர்.

இந்தத் தொகை 2019ஆம் ஆண்டு 16,047ஆக மாத்திரமே இருந்துள்ளது.

எனவே, அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் படிக்கும் சர்வதேச மாணவர்கள் மாத்திமே தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வரலாம் என விரைவில் நிபந்தனை விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், முதுகலை அல்லது பி.எச்.டி போன்ற உயர் கல்வி படிக்காத வெளிநாட்டு மாணவர்கள் அவர்களது குடும்பங்களை அழைத்து வரத் தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் இங்கிலாந்து அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஏனென்றால், இவ்வாறான தடைகளால் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு நட்டம் ஏற்படலாம் என்றும், வெளிநாட்டு மாணவர்கள் தான் அவர்களது மூல வருமானமாக உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

மதிப்பீடுகளின்படி, சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 35 பில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் வருமானம் தருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், பட்டதாரிகளுக்கான விசாக்களில் மேற்படி தடைகள் விதிக்கப்பட்டால், இந்திய மற்றும் இலங்கை போன்ற மாணவர்கள், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்குவர் எனவும் இதனால் இங்கிலாந்தில் மாணவர்கள் சேர்வது குறைந்து, பெரிய பாதிப்பு உண்டாகலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியையும் படியுங்கள் – மாணவர்களுக்கு புதிய விசா நடைமுறை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்