ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில – அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது 48 வயதுடைய பன்வில பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடம் உலர்ந்த கஞ்சா 510 கிராம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கஞ்சா செடிகள் மற்றும் உலர்ந்த கஞ்சாவுடன் சந்தேகநபரையும் விசேட அதிரடிப் படையினர் அம்பகஸ்தோவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.