ஆப்கானிஸ்தானின் திருமண நிகழ்விற்கு சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் மரணித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், சர்-இ-பல் மாகாணம், சயத் மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.