நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மிகப்பெரிய விமானப்படை பயிற்சிகளை ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.
ஜெர்மனி வழிநடத்தும் “Air Defender 23” எனும் இந்தப் பயிற்சிகள், எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கூட்டணி நாடுகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் ரஷ்யா போன்ற நாடுகள் விடுக்கும் உத்தேச மிரட்டல்களைச் சமாளிக்கவும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
25 நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த சுமார் 250 இராணுவ விமானங்கள் இப்பயிற்சிகளில் பங்கேற்கின்றன. கிட்டத்தட்ட 10,000 பேர் பயிற்சிகளில் பங்கேற்பர்.
அத்துடன், ஜப்பானும் நேட்டோவில் சேர விரும்பும் சுவீடனும் பயிற்சியில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.