நியூசிலாந்து, ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து உள்ள 3 சீன உணவகங்களில் இருந்த வாடிக்கையாளர்கள் மீது நேற்று இரவு 9 மணியளவில் கோடாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த உணவகங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த இளைஞன் ஒருவர், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இவ்வாறு ஒவ்வொரு சீன உணவகமாக சென்று அந்த இளைஞன் தாக்குதல் நடத்தினார்.
கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.