பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (Foreign, Commonwealth and Development Office) விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் பயங்கரவாதம், கடத்தல் மற்றும் மதவெறி வன்முறைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மேற்கத்தியர்கள் நேரடியாக குறிவைக்கப்படலாம். எனவே, பாகிஸ்தான் முழுவதும் அரசியல் கூட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகள் உட்பட அனைத்து கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைத் தவிர்க்குமாறும், இங்கிலாந்து பிரஜைகளுக்கு FCDO அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து பிரஜைகள் திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.