இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு (வயது 72) நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் ஷீபா வைத்தியசாலையில் கடந்த வாரம் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார்.
அதன்பின்னர் சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் இயல்பாக உள்ளன.
அவர் நலமுடன் உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்தது. அவருக்கு இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த சூழலில் அவர், நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன்பின் அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை நடந்தது என தகவல் தெரிவிக்கின்றது.