திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பீலியடி கிராமத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலமாக கிரவல் மண் அகழ்வு இடம் பெற்று வந்தது. இந்நிலையில் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் கடந்த வருடம் கிரவல் அகழ்வு இடைநிறுத்தப்பட்டது. இருப்பினும் தற்சமயம் மீள கிரவல் அகல்வை மேற்கொள்ள அரசு தரப்பும், தனியார் கிரவல் மண் ஒப்பந்தக்காரர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பிரதிநிதிகள், கிராம பெண்கள் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், திருக்கோணமலை சிவில் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் காலை 9.30 மணி அளவில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி இந்த கிரவல் மண் அகல்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரித்த ஆவண கோப்பை ஆளுநரிடம் கை அளிக்க முற்பட்டனர்.
அலுவலகத்தில் இன்று ஆளுநர் இன்மை காரணமாகவும், சற்று காலதாமதம் ஏற்பட்ட பின்னர் ஆளுநர் அலுவலக உத்தியோகத்தரிடம் குறித்த ஆவணக் கோப்பு கையளிக்கப்பட்டது.