அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஏரின் ஹனிக்கட் (Erin Honeycutt) எனும் பெண், மிக நீளமான தாடியை வளர்த்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
Polycystic ovarian syndrome எனும் பாதிப்பால் அவருக்கு அளவுக்கு அதிகமான முடி வளர்ந்துண்டு.
13 வயதிலிருந்து அவருக்குத் தாடி வளரத் தொடங்கியதாகவும் அவரால் அதைத் தடுக்கமுடியவில்லை என்றும் ஏரின் ஹனிக்கட் கூறியுள்ளார்.
அவர் முடியை அகற்றும் அத்தனை பொருள்களையும் பயன்படுத்தியுள்ளார். பின்னர் முடியை நாள்தோறும் குறைந்தது 3 முறை சவரம் செய்து அகற்றவேண்டியிருந்தது.
அதுவே வாழ்க்கைமுறையில் ஓர் அங்கமானது. பல ஆண்டுகளாக அவர் அதை பழக்கப்படுத்தினார்.
எனினும், ஒரு நாள் ஹனிக்கட்டால் அதைச் சகித்துக்கொள்ளமுடியாமல் போனது. மற்றுமொரு மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், தாடியை அகற்றுவதை நிறுத்திக்கொண்டதாகக் கூறினார்.
தற்போது 30 செண்டிமீட்டர் வரை வளர்த்து, மிக நீளமான தாடி வளர்த்த பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
மூலம் – Guinness World Records