செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேரளாவில் உச்சத்தை தொட்ட குழந்தை பாலியல் வன்முறைகள்

கேரளாவில் உச்சத்தை தொட்ட குழந்தை பாலியல் வன்முறைகள்

1 minutes read

நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்  அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில்  பாலியல் வன்முறைகள் உச்சத்தை தொட்டுள்ளது .

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், வாகனங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

பாலியல் சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்டது.

கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் அமலாகிய நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 1,002 வழக்குகள் பதிவாகின. ஆனால் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 4,582 ஆக அதிகரித்து உள்ளது.

2013-ஆண்டை ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகமாகும். இந்த வழக்குகளில் மொத்தம் 5,002 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் களில் 4,643 பேர் ஆண்கள். 115 பேர் பெண்கள். மீதமுள்ள 244பேர் ஆணா அல்லது பெண்ணா என்ற விவரம் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு பதிவாகியிருக்கும் போக்சோ வழக்குகளில் 1,004 சம்பவங்கள் வீடுகளிலும், 133 சம்பவங்கள் பள்ளிகளிலும், 102 சம்பவங்கள் வாகனங்களிலும், 99 சம்பவங்கள் ஓட்டல்களிலும், 96 சம்பவங்கள் நண்பர்களின் வீடுகளிலும், 29 சம்பவங்கள் மருத்துவமனைகளிலும், 12 சம்பவங்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களிலும், மற்றவை வேறு சில பொதுவான இடத்திலும் நடந்துள்ளது.

பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்-சிறுமிகளே அதிகம்.

பெரும்பாலான குழந்தைகள் தங்களது சொந்த வீட்டிலேயே உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More