இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர்.
இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு நடைபெற்றுள்ளது . நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.
எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.