இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரச வைத்தியசாலையில் ஒரே நாளில் 12 பகுழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் உயிரிழந்தனர்.
மரணமடைந்த சில பெரியவர்கள் பாம்புக் கடிக்குச் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் போதிய மருந்துகளும் சுகாதார ஊழியர்களும் இல்லாதது மரணங்களுக்குக் காரணம் என்று மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அத்தகவலை மறுத்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“வைத்தியசாலையில் தேவையான மருந்துகள் உள்ளன. போதிய நிதியும் இருக்கிறது. அனைத்து நோயாளிகளுக்கும் சரியான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன”
“மரணமடைந்த பெரியவர்களில் 4 பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இருவர் சிறுநீரகக் கோளாற்றால் அவதியுற்றவர்கள். சிலர் வீதி விபத்துகளில் கடுமையாகக் காயமுற்றவர்கள். குழந்தைகளில் 4 பேர் மோசமான உடல்நிலையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டிருந்தனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.