0
திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பின் போது சந்தைப்படுத்த முடியாத அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததால் நான்கு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவலைப்பு இடம் பெற்றது இதன் போது மூதூரில் 3 அழகு சாதனப் பொருள் கடையும் கிண்ணியாவில் ஒரு கடையுமாக நான்கு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதுடன் திருகோணமலை நகர் பகுதியில் அரிசி விற்பனை விலை காட்சிப்படுத்தாமையினால் குறித்த கடை உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.