செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி வடக்கு வலயத்திற்கு அலுவலக உபகரண உதவி வழங்கிய அபியகம்

கிளிநொச்சி வடக்கு வலயத்திற்கு அலுவலக உபகரண உதவி வழங்கிய அபியகம்

1 minutes read

கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி அலுவலகத்திற்கு இலண்டன் அபியகம் நிறுவனம் அலுவலக உபகரணத்தை வழங்கியுள்ளது. இதற்காக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி அலுவலகம் அபியகம் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

சில வருடங்களின் முன்னர் கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில் புதிதாக இயங்கத் தொடங்கியுள்ள கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதியன்று இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திரு அருந்தவச்செல்வன் மற்றும் மயூரன் ஆகியோரிடம் கவிஞரும் ஆசிரியருமான தீபச்செல்வன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவன் கி. அலெக்ஷன் உள்ளிட்டோர் அபியகத்தினர் வழங்கிய அலுவலக உபகணரத்தை (மேசை விரிப்பு) கையளித்திருந்தனர்.

சுமார் 50ஆயிரம் ரூபா பெறுமதியான மேசை விரிப்பு இதன்போது வழங்கப்பட்டது. இதேவேளை இதே வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெறும் காலைநேர விசேட வகுப்பு மாணவர்களுக்கு அபியகம் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More