போரால் பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சுமார் 1.2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட வேண்டுமென ஐ.நா மனிதாபிமான உதவி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
காஸாவிலுள்ள 2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கும் மேற்குக்கரையில் உள்ள சுமார் 500,000 பேருக்கும் அந்த நிதியுதவி வழங்கப்படும்.
போரில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருள்கள் மற்றும் தங்குமிடம் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்க நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்தது.
இவ்வாண்டின் இறுதிவரை அந்தத் தொகை கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.
மேற்குக் கரையில் வாழும் பாலஸ்தீனர்களின் நிலைமையும் மிகவும் மோசமடைந்துள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரித்துள்ளது.
வெளிநாட்டினரும் காயமடைந்தோரும் காஸாவைவிட்டு எகிப்துக்குள் நுழைய முயல்கின்றனர்.
பிரான்ஸ், 30க்கும் மேற்பட்ட அதன் குடிமக்கள் காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தது.
கனடிய ஊடகங்கள் இன்றிலிருந்து (5 நவம்பர்) நூற்றுக்கணக்கான கனடிய மக்கள் வெளியேற்றப்படுவர் என்று ஒட்டாவாவுக்கு (Ottawa) உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.