அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டம் ஊடாக 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் சுமார் 15 ஆயிரம் அரச ஊழியர்கள் இந்தச் சம்பள உயர்வைப் பெறுவார்கள் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 13 ஆம் திகதி பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ள ஜனாதிபதி, தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான யோசனையையும் முன்வைக்கவுள்ளார்.