(பல அரசியல் கைதிகளைப் போலவே நானும் ஆயுள் தண்டனையில் அமர்ந்திருக்கிறேன். இந்த ஆட்சியின் ஆயுட்காலம் மூலம் என் வாழ் நாள் அளவிடப்படுகிறது, என ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தெரிவித்துள்ளார்)
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் இருந்து காணாமல் போனதாக அவரது ஆதரவுக்குழு தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புட்டினின் அரசியல் எதிரி நவால்னி :
47 வயதான அலெக்ஸி நவால்னியின் வழக்கறிஞர்கள் கடந்த திங்களன்று சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறினர். அவர் மாஸ்கோவிலிருந்து கிழக்கே 150 மைல் தொலைவில் உள்ள ஒரு தண்டனை கூடிய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆயினும் அவர் இருக்கும் இடம் முழுமையாக தெரியவில்லை.
தீவிரவாத சமூகத்தை உருவாக்குதல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக நவீல்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே மோசடி மற்றும் அவர் மறுக்கும் பிற குற்றச்சாட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான அவரது விமர்சனத்தை அடக்குவதற்கான அரசியல் சூழ்ச்சி முயற்சி என்று அவரது கைது மற்றும் சிறைவாசம் என நவால்னியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு நவால்னி இருப்பதாக நம்பப்படுகிறது.
நவால்னியை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என்றும் , நவால்னி கடைசியாக மாஸ்கோவின் கிழக்கே உள்ள IK-6 தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை கவலை:
நவால்னியின் காணாமல் போன செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை என்று அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் முதலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது. மேலும் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதைப் பார்க்க மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றப் போகிறோம், என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த திங்களன்று வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் நவால்னி ஆஜராக வேண்டும். சிறைச்சாலையில் மின்சார பிரச்சினை காரணமாக நவால்னி விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என சிறை அதிகாரிகள் அவரது குழுவிடம் தெரிவித்தனர்.
மார்ச் 2024 இல் ரஷ்ய தேர்தல்:
மார்ச் 2024 இல் ரஷ்யாவின் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடப் போவதாக புட்டின் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு நவால்னியின் காணாமல் போன விவகாரம் நடந்துள்ளது. மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடும புட்டின் குறைந்தபட்சம் 2036 வரை அவர் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஆட்சியின் போது புட்டினின் சட்டப்பூர்வத்தன்மைக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றை நவால்னி முன்வைத்தார். அவர் அரசாங்க எதிர்ப்பு தெரு ஆர்ப்பாட்டங்களை பல ஏற்பாடு செய்தார். கிரெம்ளின் மற்றும் ரஷ்ய வணிகத்தில் கூறப்படும் ஊழலை அம்பலப்படுத்த தனது வலைப்பதிவு மற்றும் சமூக ஊடகங்களை நவால்னி பயன்படுத்தினார்.
2020இல் சைபீரியாவின் ஓம்ஸ்கில் இருந்து மாஸ்கோவுக்குச் செல்லும் விமான பயணத்தின்போது நவால்னி மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். நவால்னிக்கு ‘நோவிசோக்’ என்கிற, சோவியத் பனிப் போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
நவால்னி கொலை முயற்சி:
நவால்னியை சைபீரிய நகரமான ஓம்ஸ்கில் இருந்து விமானம் ஏற்றி, பெர்லினில் உள்ள மருத்துவமனைக்கு கோமா நிலையில் கொண்டு வர வேண்டியிருந்தது.
கூட்டு விசாரணயில் நவால்னியின் விஷத்தில் ரஷ்ய பாதுகாப்பு சேவையை (FSB) தொடர்புபடுத்தியது. சுமார் ஆறு முதல் 10 முகவர்கள் கொண்ட FSB குழு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நவால்னியை பின்தொடர்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
நவால்னியை பின் தொடர்ந்த உளவாளிகளில் ஒருவரான கான்ஸ்டான்டின் குத்ரியாவ்ட்சேவ் என்பவர் எப்படி விஷம் குடித்தார் என்பதை வெளிப்படுத்தினார். ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரியாக அவர் இருந்தார். நச்சு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டதுடன், அவர் நவால்னியின் உள்ளாடைகளில் நரம்பு விச முகவர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டனர் என்பது பற்றிய விரிவான அறிக்கையை வழங்கினார்.
நவால்னியின் கொலை முயற்சியில் பங்கேற்றதை ரஷ்யா மறுக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு சேவை நவால்னியைக் கொல்ல விரும்பியிருந்தால், அவர்கள் வேலையை எப்போதோ முடித்திருப்பார்கள் என்று புட்டின் டிசம்பர் 2020 இல் கூறினார்.
சிறையில் அலெக்ஸி நவால்னி :
சிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னி, மாஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையில் 19 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வழங்கியது.
நவால்னி கடந்த தசாப்தத்தில் ரஷ்யாவின் உரத்த எதிர்ப்புக் குரலாக இருந்தார். மேலும் 2021 இல் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணிகளை ஊக்குவித்தார்.
ஆயினும் ஜனவரி 2021 இல் ரஷ்யாவுக்குத் திரும்பிய நவால்னி உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். 2013 இல் அவருக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான அவரது தகுதிகாண் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், அவர் அரசியல் நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டார்.
அவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக சிறையில் இருந்து பிரச்சாரம் செய்ததுடன், போருக்கு பொது எதிர்ப்பை திரட்ட முயன்றார்.
பல அரசியல் கைதிகளைப் போலவே நானும் ஆயுள் தண்டனையில் அமர்ந்திருக்கிறேன் என்பதை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். எனது வாழ்நாள் அல்லது இந்த ஆட்சியின் ஆயுட்காலம் மூலம் என் வாழ்க்கை அளவிடப்படுகிறது, என்று சிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னி தெரிவித்துள்ளார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா