பலத்த காற்று மற்றும் கனமழையுடன் இங்கிலாந்தை தாக்கிய இஷா புயல் காரணமாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் வடமேற்கு என இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பர்மிங்காம் மற்றும் லண்டன் யூஸ்டன் இடையே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வழித்தடங்களில் குறைந்த சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேரோடு சாய்ந்த மரங்கள் பல வீதிகளில் முறிந்து விழுந்துள்ளன.
மின்சாரம் இல்லாமல் மக்கள் பலர் இரவைக் கழித்துள்ளனர்.
மேலும், லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகள் தவிர இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
காற்றின் வேகம் மணிக்கு 128 கி.மீ என இருக்கும் என்றும், இங்கிலாந்து முழுக்க இவ்வாறு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுவது அரிதான ஒன்று என்றும் வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.