குஜராத்தில் 979 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்துள்ளார்.
குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இந்த பாலம் இணைப்பதுடன், இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2.32 கி.மீ. தொலைவை கொண்ட இந்த பாலத்தில் 900 மீட்டர் தொலைவுக்கு கேபிளால் இருபுறமும் இணைக்கப்பட்ட பகுதி, பாலத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.
27.20 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்துக்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கேபிள் பால திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி பெய்த் துவாரகா பகுதியில் உள்ள துவாரகதீஷ் கோவிலில் வழிபாடு மேற்கொண்டதுடன், மக்கள் மத்தியில் உரையாற்றினார்.