கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகளில், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை பெறும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஆளும் பா.ஜ.க., 272 என்ற பெரும்பான்மைக்கான வெற்றியை தனிக்கட்சியாக பெற முடியாமல் போன நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகின்றது.
இந்த சூழலில், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடி, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.