5
திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.
வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் தலைமறைவாகி உள்ளநிலையில், அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.