கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் கால்நடையாக அமெரிக்காவுக்குள் நுழைவதாக, அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், இவ்வாண்டு இதே காலகட்டத்தில் இவ் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது ‘டங்கி’ என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து 2023ஆம் ஆண்டு வெளிச்சம் போட்டு காட்டினார்.
கனடா-அமெரிக்க எல்லைக் கடப்பைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இப்போது அமெரிக்காவை அணுகுவதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த வழியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, மெக்சிகோ எல்லைப் பாதையைப் பயன்படுத்தும் வழக்கமான பாதையிலிருந்து ஊடுருவல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.