வாசிப்பு குன்றிப்போய்
வார்த்தையும் குறைஞ்சுபோய்
நேசிப்பும் மந்திப்போய்
நோயாளியா இருக்கினம்.
பக்கேஜ் கூடிப்போய்
ரிக்ரொக்கில் மூழ்கிப்போய்
சொக்கலேட்டு உண்பதுபோல்
சொர்க்கமெண்டு நினைக்கினம்.
பார்வையும் மங்கிப்போய்
படிப்பையும் வெறுத்துப்போய்
யாரையும் நம்பிக்கொண்டு
நடு வீட்டுக்க கிடக்கினம்.
புத்தாக்கம் உக்கிப்போய்
புத்தியும் மக்கிப்போய்
நித்திரையும் தொலைச்சுபோய்
நோஞ்சானாத் திரியினம்.
போர்க்களத்தில் தப்பிப்போய்
போதையில அப்பிப்போய்
வலைத் தளத்தில் ஊறிப்போய்
வாழ்க்கைதரத்தைத் தொலைக்கினம்.
மோ.கோகுலன்
ஆசிரியர்
கிளி/பரந்தன் இந்தும.வி