May 31, 2023 5:26 pm

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email


அண்மையில் நாம் கொண்டாடிய தமிழர் திருநாள் தைப்பூசத்தை ஒட்டி இப்பதிவு பகிரப்படுகின்றது. இன் நன்நாளில் முருகப் பெருமான் சக்தியிடம் இருந்து வேல் பெற்றார் என்பது ஐதீகம். சங்க காலம் தொடங்கி இன்று வரை தமிழர்கள் தைப்பூச விழாவினில் முருகப்பெருமானின் வேலைப் போற்றி கொண்டாடி வருகின்றனர்.

பல படை கருவிகள் இருந்தாலும் வேல்ப்படைக்கு உள்ள சிறப்புகள் வேறு எந்தப் படைக் கருவிக்கும் அன்று இருந்திருக்கவில்லை என்பதை நாம் இங்கு அறுதியிட்டுக் கூறலாம். தமிழ் மன்னர்களின் தனித்த ஆயுதம் வேல் ஆகும்.
வேலும் ஈட்டியும் வெவ்வேறு ஆயுதங்கள். வேலின் முகம் அகன்று விரிந்திருக்கும். ஈட்டியின் முகமோ குறுகி இருக்கும். வேல் ஆயுதத்தை மன்னர்களும் படைத்தலைவர்களுமே ஏந்துவார்கள். ஆனால் ஈட்டியை அனைத்துப் போர் வீரர்களும் வைத்திருப்பர். பகைவனில் இருக்கும் சிறந்த போர் வீரனுக்கே வேலை எறிவார். எல்லோருக்கும் இந்த வேலை எறிவது இல்லை என்பது இங்கு ஒரு சிறப்பு அம்சமாக காணப்படுகின்றது.

ஆக சங்ககாலத்தில் வேல் ஆயுதத்தை வணங்கி வந்த முன்னோர்கள் பின்னாளில் தான் உருவங்களை ஆக்கி வழிபடத் தொடங்கி இருக்கின்றார்கள். பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலை இருக்காது. வெறும் வேல் வழிபாடு இருப்பதை நாம் இன்றும் காணலாம். உதாரணமாக பழமுதிர்ச்சோலை, செல்வச் சந்நிதி போன்ற கோயில்களில் நாங்கள் வேல் வழிபாட்டைக் காணலாம். அதே போல இன்றும் கிராமப்புறங்களில் வேலை மட்டும் வைத்து வணங்குவதுண்டு. அல்லது சூலாயுதத்தை வைத்து வணங்குவதை நாம் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது.

புறநானூறு 279

சிறிய பருவத்தின் போது வேல் எனும் போர்க்கருவி தாயால் அறிமுகப்படுத்தப் பட்டுத் தரப் பெற்றமை இங்கு காணப்படுகின்றது.
” இன்றும் செருப்பரை கேட்டு இருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி”
என்று இந்த பாடல் வருகின்றது. அதாவது இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டவுடன் ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆவலுடன் எண்ணிப் பார்த்து தன்னுடைய மகனை, இளம்பிள்ளையை பரந்து கிடந்த அவன் தலை முடியை எண்ணெய் வைத்து சீவி முடித்து வெண்ணிற ஆடை உடுத்தி விட்டு வேலைக் கையில் கொடுத்து “போர்க்களம் நோக்கிச் செல்க” என ஒரு தாய் அனுப்பி வைப்தை இந்த பாடல் விரித்துச் செல்கின்றது. அன்று அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த வேல் எனும் ஆயுதம் ஆகும்.

வேலன் வெறியாட்டு

சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டு என்ற ஒரு பகுதியே இருக்கின்றது. இதை வெறி அயர்தல் என்றும் கூறுகின்றார்கள். வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கிய பாத்திரமாக உள்ளான். இவனே பெண்களின் பேயை ஓட்டினான் என்றும் கூறுகிறார்கள். இதை வேலன் விளையாட்டு அல்லது வெறி அயர்தல் என்று சங்க இலக்கியத்தில் கூறப்படுகின்றது.

அகநானூறு 195
“அறுவை தேயும் ஒரு பெரும் குடுமி ஆகுவது அறியும் முதுவாய் வேல”
என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கின்றது. காதலனுடன் சென்ற என் மகளை கூட்டிக்கொண்டு அவன் தன் மனைக்கு செல்வானா? இல்லை என் மனைக்கு வருவானா? வேலா குறி சொல்லும் வேலனே உன் கோலை நிறுத்திப் பார்த்து எனக்கு சொல். என தாய் ஒருத்தி கேட்பதாக இந்தப் பாடல் அமைகின்றது. ஆகவே வேலை வைத்திருக்கும் வேலன் முருகப்பெருமானின் பக்தனாக, பூசாரியாக இருந்திருக்கின்றான் இவனே அந்த வேலன் விளையாட்டு என்பதை நிகழ்த்தி இருக்கின்றான். இவ்வாறு வேல் என்பதை ஒரு மிக முக்கியமான ஒரு படைக் கருவியாகவும் முருகப்பெருமாவின் கருவியாகவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே நமது முன்னோர்கள் வேல் வழிபாட்டை ஒரு மரபு வழிபாடாக வணங்கி இருக்கின்றார்கள். உருவ வழிபாடு ஏதுமின்றி பெண்ணையும் மண்ணையும் வணங்கிய தமிழன் ஆரியத் தாக்கத்தின் பின் விண்ணை வணங்கத் தொடங்கினான் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கருத்தாக இங்கு இருக்கின்றது. அதன் பின்னரே உருவங்கள் வரத் தொடங்கின.

நாம் மண்ணை வணங்கினோம், பெண்ணை வணங்கினோம், என்பதற்கு எடுத்துக் காட்டாக சூரியனை வணங்கத் தைப்பொங்கலை அறுவடையின் பின் கொண்டாடினோம். விவசாயத்துக்கு உதவி செய்த மாடுகளுக்கு மாட்டுப் பண்டிகையைக் கொண்டாடினோம். சூரியன் திசை திரும்புவதையும் வெயில் காலத்தில் நோய் நொடிகள் வராமல் இருக்கவும் சித்திரையில் பெருவேனில் நாளைக் கொண்டாடினோம். அதே போலவே பெண்ணை நாம் வணங்கினோம், என்பதற்கு கொற்றவை வழிபாடு, பரணி நூல்களின் காலத்தால் முற்பட்ட கலிங்கத்துப் பரணியில் இருக்கின்றது. பாலை நிலத் தெய்வமாக கொற்றவை இருந்திருக்கின்றாள்.

நாம் சிறுவயதில் கிராமப்புறங்களில் கண்ணுற்ற வேல் வழிபாடு, சூலாயுத வழிபாடு போன்றவை அருகிக் கொண்டு போவதை இன்று வேதனைக்குரிய விடையமாக காண்கின்றோம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்