கிளி மக்கள் அமைப்பின் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கிளி மக்கள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி இலண்டனில் இடம்பெறுகின்றது.
2022ம் ஆண்டுக்கான “மண்ணின் மகள்” விருது எழுத்தாளர் தாமரைச்செல்விக்கும்
2023ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது வைத்தியர் விக்னேஸ்வரனுக்கும்
வழங்கப்பட உள்ளது.
எம்மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இம் மாந்தர்களுக்கு மாண்பேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.