ஏர் இந்தியா விமானம் உட்பட இந்நியாவின் பிரபல 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் The Hindu இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பையிலிருந்து நியூயோர்க் செல்லும் ஏர் இந்தியா விமானம், மும்பையிலிருந்து ஓமான் தலைநகர் மஸ்கட்டுக்கும் சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கும் (Jeddah) செல்லும் IndiGo விமானங்கள் இரண்டு ஆகிய மூன்று விமானங்களுக்குமே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஏர் இந்தியா விமானம் டில்லிக்குத் திருப்பி விடப்பட்டது. விமானத்திலிருந்த 239 பயணிகளும் 19 ஊழியர்களும் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறக்கப்பட்டு, பாதுகாப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பயணிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டனர் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
பலத்த பாதுகாப்புகளுக்கு பின்னர் இன்று (15) விமானம் மீண்டும் பயணத்தைத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மற்றைய IndiGo விமானங்கள் இரண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். குறித்த இரு விமானங்களிலும் பாதுகாப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.