பாறைகளுக்கு இடையே தலைகீழாக சிக்கிய பெண் ஒருவர், மீட்பு பணியாளர்கள் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அவுஸ்ரேலியா – நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் Hunter Valley எனும் இடத்தில் இரு கற்பாறைகளுக்கு இடையே குறித்த பெண் தலைகீழாக சிக்கிக்கொண்டார்.
பாறைகளுக்கு இடையே அவரது கையடக்கத் தொலைபேசி விழுந்ததால் அதனை எடுக்க முயற்சி செய்தபோது அந்தப் பெண் சிக்கிக்கொண்டார்.
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த மட்டில்டா கேம்பலைக்கை காப்பாற்ற அவருடைய நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முயன்றனர். பின்னர் அவசர உதவியை அவர்கள் நாடினர்.
அங்கிருந்த பல கனமாக கற்பாறைகளை மீட்புப் பணியாளர்கள் அகற்றினர். இலேசான கீறல்களுடனும் காயங்களுடனும் கேம்பல் காப்பாற்றப்பட்டார்.
“என்னுடைய 10 ஆண்டு அனுபவத்தில் இது போன்ற சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை” என்று மீட்புப் பணியாளர் ஒருவர் கூறினார்.