புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம்

வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம்

2 minutes read

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்

கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே

தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு

மேவ வாராதே வினை

இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல விரதங்கள் உள்ளபோதும் வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

இலங்கையில் மட்ட்டுமல்லாது இந்தியா , மலேசியா போன்ற நாடுகளிலும் மருக கடவுளுக்கு தனிச்சிறப்பு உண்டு. கந்த சக்ஷ்டி நாட்களில் முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிசேகஙகள் இடம்பெறுவது வழமை.

அந்தவகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆலயம், செல்வச்சன்னதி , மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் கந்த சக்ஷ்டி வெகு சிறப்பாக இடம்பெறுவதுடன் சூரன்போரும் இடம்பெறுகின்றது.

தமிழ் கடவுளாம் முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது.

சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்
குழந்தை இல்லாத தம்பதிகள் அழகன் முருகனை நினைந்து சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை . சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர் .

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

தவிர்க்க வேண்டியவை
உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு விரதமிருபவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும்

முருகன் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலுக்கு சென்று அங்கேயே 6 நாட்களும் தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More